தலைநகர் டெல்லியில் கடந்த 10-ஆம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த நிலையில், இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகப் ஃபரிதாபாத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட இந்த வெடிபொருட்கள் ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்தபோது, அவற்றை ஆய்வு செய்து கொண்டிருந்த தருணத்தில் திடீரென வெடித்துச் சிதறியது.

“>

 

இந்த துயரச் சம்பவத்தில் தடயவியல் குழுவினர் மற்றும் போலீசார் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் பலியான சோகத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தியிருந்த நிலையில், மீண்டும் வெடிபொருள் வெடித்து 7 பேர் உயிரிழந்துள்ள இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.