தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரக்கூடிய கீர்த்தி சுரேஷ் மூத்த நடிகையான மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேனகா தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் சகோதரியான ரேவதி சுரேஷ் இப்போது டைரக்டர் ஆகியுள்ளார்.

சில ஆண்டுகளாக தமிழ், மலையாள பட உலகில் பிரபல டைரக்டராக இருக்கும் பிரியதர்ஷனிடம் ரேவதி சுரேஷ் உதவி இயக்குனராக பணிபுரிந்து பயிற்சி பெற்று வந்தார். இப்போது படம் இயக்க வந்துள்ளார். புது குறும்படம் ஒன்ரை ரேவதி சுரேஷ் இயக்கியுள்ளார்.

இப்படத்துக்கு “தேங்க் யூ” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரை கீர்த்தி சுரேஷ் தன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு டைரக்டரான சகோதரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குறும்பட இயக்குனர் ஆகியுள்ள ரேவதி சுரேஷ் விரைவில் திரைப்படம் டைரக்டு செய்யவும் தயாராகி வருகிறார்.