ஐபிஎல் 2026 சீசனுக்காகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பயிற்சி முடிந்து வரும் தோனியிடம் சில ஆர்சிபி ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டுள்ளனர்.

அதற்குத் தோனி, இப்போது இல்லை ‘அப்புறம் வாருங்கள்’ என்று சைகை காட்டியதோடு, தனது சிஎஸ்கே கிட் பேக்கைச் சுட்டிக்காட்டி தனது அணியின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். ​தோனியின் இந்த ‘ப்ரைஸ்லெஸ்’ ரியாக்ஷன் சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆர்சிபி ரசிகர்கள் கேட்ட ஆட்டோகிராப்பிற்கு, தனது அணியின் அடையாளத்தை முன்னிறுத்தி அவர் பதில் சொன்ன விதம், தோனி இப்போதும் சிஎஸ்கே-வின் உண்மையான தலைவன் என்பதை நிரூபிப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.