
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் மோதும் போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி நடைபெறும் போது ஜியோ சினிமாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா வருகை புரிந்தார்.
அப்போது அவரிடம் அபினவ் முகுந்த் கேள்வி எழுப்பினார். அதாவது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி தான் தோனியின் கடைசி போட்டியாக இருக்குமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சுரேஷ் ரெய்னா நிச்சயமாக இல்லை என்று கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.