கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மால்பே துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு மீன் திருடியதாக கூறி ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநில முதல்வர் கூறியதாவது, என்ன காரணமாக இருந்தாலும் ஒரு பெண்ணின் கையையும் காலையும் கட்டி வைத்து தாக்குவது மனிதநேயமற்ற செயல்.

இது ஒரு கடுமையான குற்றம். இது போன்ற காட்டுமிராண்டித்தனமான நடத்தை கர்நாடகா போன்ற நாகரீக இடத்திற்கு தகாது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.