
காதலர் தினத்தை முன்னிட்டு, பலர் தங்களின் காதலர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய காதலனை பழிவாங்கும் விதமாக 100 பீட்ஸாக்களை ஆர்டர் செய்து காதலனை எரிச்சல் அடைய வைத்த சம்பவம் ஒன்று இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகிறது. ஆயுஷி ராவத் என்பவரின் முன்னாள் காதலர் யாஷ். இருவரும் காதலித்து வந்த நேரத்தில் ஒரு கட்டத்தில் பிரிந்துள்ளார்கள். இதில் காதலன் யாஷை பழிவாங்க நினைத்த காதலி ஒரு முடிவெடுத்துள்ளார்.
அதன்படி ஆயுஷி தன்னுடைய முன்னாள் காதலன் வீட்டுக்கு 100 பீட்ஸாக்களை கேஷ் ஆன் டெலிவரி மூலம் அனுப்பியுள்ளார். அதாவது டெலிவரிக்கு பிறகு யாஷ் பணம் கட்ட வேண்டும். அதன்படிசி ஆர்டர் செய்து அனுப்பி 100 பீட்சாக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த முன்னாள் காதலர் யாஷ் டெலிவரிக்கு பணம் செலுத்த முடியாமல் டெலிவரி ஊழியர்களோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. சிலர் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும், மற்றவர்கள் இதை ஒரு மார்க்கெட்டிங் தந்திரமாகக் கருதுகின்றனர். மேலும் ஒருசிலர் இது நகைச்சுவை நோக்கில் உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது எந் அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
View this post on Instagram