மும்பையில் மாவு அரைக்கும் கிரைண்டருக்குள் விழுந்து இளைஞர்‌ ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பையில் ஒரு சாலையோரத்தில் சீன உணவக கடை உள்ளது. இங்கு ஜார்க்கண்டை சேர்ந்த 19 வயதான சூரஜ் நாராயண யாதவ் என்ற வாலிபர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் சம்பவ நாலில் மஞ்சூரியன் மற்றும் ‌ சைனீஸ் பெல் உணவை தயாரிக்க மாவு அரைத்துள்ளார்.

அவர் தன்னுடைய கையை உள்ளே விட்டபோது இடுப்பு உயரத்தில் இருந்த அந்த கிரைண்டருக்குள் அவருடைய சட்டை எதிர்பாராத விதமாக மாட்டியது. இதில் அவர் சிறிது நேரத்தில் கிரைண்டருக்குள் இழுபட்டார். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி பதற வைக்கிறது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.