
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த 14-ம் தேதி இளம் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் மருமகன், மருமகள் வீட்டார் இடையே ஏர்கூலர் அருகில் யார் உட்காருவது என தகராறு செய்தனர். இந்த தகராறு அதிகமானதால், மருமகள் ஆத்திரம் அடைந்தார்.
அதனால் அவர், இப்போதே இவ்வளவு சண்டை என்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும் எனக் கூறி இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தை அறிந்து வந்த காவல்துறையினர் மணமகன் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.