தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் அதிரடி திருப்பமாக சோனியா காந்தி தலையிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகள் என காங்கிரஸ் கொடுத்த அழுத்தம் காரணமாக இரு கட்சித் தொண்டர்களிடையே சமூக வலைதளங்களில் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், “திமுக நமக்கு நீண்ட கால மற்றும் நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது; எனவே தேவையற்ற மோதல்களைத் தவிர்த்து, சீட் பங்கீட்டில் நெகிழ்வுத்தன்மையைக் காட்டி (Adjust) கூட்டணியை உடனடியாக இறுதி செய்யுங்கள்” என சோனியா காந்தி தமிழக காங்கிரஸ் மேலிடத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டெல்லியின் இந்த ‘க்ரீன் சிக்னல்’ காரணமாக, கடந்த சில நாட்களாக நீடித்த முட்டுக்கட்டை நீங்கி, தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே சுமூகமான பேச்சுவார்த்தை தொடங்கி இறுதி முடிவை நோக்கி நகர்ந்து வருகிறது.