கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேற்று பாஜக மற்றும் அதிமுக கூட்டணி உறுதியான நிலையில் அதற்கு முன்னதாகவே கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில் எடப்பாடி பழனிச்சாமி, எஸ் பி வேலுமணி, அம்மன் அர்ஜுனன், ஜெயராமன் ஆகியோர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.

இந்த போஸ்டரில் 2026 தலைமையில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அதோடு கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியாக வரும் என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில் இந்த போஸ்டர்கள் திடீரென கிழிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களை கிழித்தது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.