
பஞ்சாப் மாநிலத்தின் பத்திந்தா பகுதியில், “இன்ஸ்டா குயின்” என சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் பெண் போலீசாரான அமன்தீப் கௌர் கைது செய்யப்பட்டுள்ளார். மான்சா பகுதியில் பணியாற்றி வந்த இவர் தற்போது பத்திந்தா போலீஸ் லைனில் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தார். பத்திந்தாவின் பாதல் ரோட்டில்போலீசாரும் போதைப்பொருள் தடுப்பு படையினரும் சோதனை நடத்தியபோது, அவர் தப்பிச் செல்ல முயற்சித்தார். ஆனால், அவரை போலீசார் பின்தொடர்ந்து கைது செய்தனர். காரில் சோதனை செய்தபோது, கியர் பாக்ஸில் 17.71 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.
அமன்தீப் கௌர் சமூக வலைதளங்களில் “மேரி ஜான்” என்ற பெயரில் மிகவும் பிரபலமாக உள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 14,000க்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உள்ளனர். பஞ்சாபி பாடல்களுக்கு காவல் துறைக் கப்பலில் வீடியோக்கள் எடுத்து பதிவிட்டு வந்தார். போலீசார் கூறுகையில், இவர் ஹரியானா மாநிலம் சிற்சாவில் தொடர்ந்து போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகவும், அவரும் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். அவரிடம் தற்போது டோப் டெஸ்ட் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
पंजाब पुलिस की कांस्टेबल अमनदीप कौर बर्खास्त !!
बठिंडा पुलिस ने कल ही इस कांस्टेबल को 17.71 ग्राम हीरोइन सहित पकड़ा था, जब वो थार से इसे हरियाणा सप्लाई करने जा रही थी। pic.twitter.com/JAzjjFasCU
— Sachin Gupta (@SachinGuptaUP) April 3, 2025
இந்நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் அமன்தீப் கௌருக்கு ஏராளமான பாலோவர்ஸ் இருப்பதோடு, காவல் துறையின் உயரதிகாரிகள் மற்றும் சில அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமான தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னும் அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மான்சாவுக்கு மாற்றப்பட்டிருந்தார். ஆனால், சில நாட்களில் தான் மீண்டும் பத்திந்தா போலீஸ் லைனில் சிபாரிசின் மூலம் தற்காலிக பணியில் இணைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர்மீது போலீசார் மேலும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.