
உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில், ஈ-ரிக்ஷா மீது நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்து கொண்டிருந்த சந்திரசேகர் ராவத் என்ற 50 வயதான நபர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரேத பரிசோதனை மையத்தில் பணியாற்றி வந்த சந்திரசேகர், அந்த பகுதியில் ரீல்ஸ் எடுக்கும் நோக்கத்தில் ஈ-ரிக்ஷாவின் மேல் ஏறி நடனமாடிக் கொண்டிருந்தபோது, ரிக்ஷா திடீரென நகர்ந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
50 साल के चंद्रशेखर रावत ने अपनी जिंदगी में सैकड़ों पोस्टमार्टम कराए। बॉडी चीरने–फाड़ने का काम किया। वही चंद्रशेखर ई रिक्शा पर चढ़कर डांस कर रहा था। अचानक नीचे गिरा और मौत हो गई।
📍जिला गाजीपुर, यूपी pic.twitter.com/rMUfWO26fM
— Sachin Gupta (@SachinGuptaUP) March 28, 2025
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சமூக ஊடக புகழுக்காக எடுக்கப்படும் ரீல்ஸ்கள் பல சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக மாறும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறது.