
மேற்குவங்க மாநிலத்தில் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தின் கார்தா என்ற பகுதியை சேர்ந்த பிரியங்கா கோஸ் என்ற பெண் ஒருவர் பணம் கொடுத்து குழந்தையை வாங்கி வளர்த்து வருவதாக போலீஸ் தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவரின் வீட்டிற்கு சென்ற போலீசார் 8 மாத ஆண் குழந்தையை மீட்டனர். அதன் பிறகு பிரியங்கா விடம் நடத்திய விசாரணையில் அதே மாவட்டத்தை சேர்ந்த ஜெய் தேவ் கோஷ் – சாந்தி தம்பதியின் குழந்தையை இரண்டு லட்சம் ரூபாய்க்கு வாங்கியது தெரிய வந்தது. உடனடியாக தாய் சாந்தி மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய பிரியங்கா ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் தந்தை தலைமறைவாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்திய போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் எங்களுக்கு மிகுந்த ஆர்வம் இருந்ததாகவும் பல்வேறு ஊர்களுக்கு சென்று ரீல்ஸ் படம் பிடிப்பதற்கு ஆசைப்பட்டோம். அதனால் அதிக பணம் தேவைப்பட்டதால் விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோன் வாங்கி அதில் ரூல்ஸ் படம் பிடிக்க ஆசைப்பட்டதால் 8 மாத ஆண் குழந்தையை பெற்றோம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் அந்த குழந்தையை விற்க அவர்கள் முயற்சி செய்தும் தோல்வி அடைந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.