உத்திரபிரதேசம் மீரட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக இளைஞர் ஒருவருடன் பழக்கம்  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் வங்கியில் வேலை செய்வதாகவும், அந்த பெண்ணுக்கும் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை அந்த பெண்ணும் நம்பியுள்ளார்.

இதனையடுத்து அந்த இளைஞரின் நண்பரோடு ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் நண்பர் இருந்துள்ளார். பின்னர் அப்பெண்ணுக்கு தெரியாமல் அவர் குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து இருவரும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.மயக்கம் தெளிந்ததும் தனக்கு நடந்த கொடூரத்தை அறிந்த அப்பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.