நாமக்கல் மாவட்டத்திலுள்ள நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் கவிதா (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அங்கன்வாடி மையத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இறந்துள்ளார். இந்த சிறுமி ஒரு அரசு பள்ளியில் படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வினை எழுதி முடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று ரிசல்ட் வெளியாகும் நிலையில் மாணவி மிகுந்த பயத்துடன் இருந்த நிலையில் மதிப்பெண்கள் குறைவாக கிடைக்கும் என அச்சப்பட்டுள்ளார். அதோடு தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்று மாணவி மிகவும் பயந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேர பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.