
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகின்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை அவர் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். இது இவர் தாக்கல் செய்யும் ஏழாவது பட்ஜெட் ஆகும். பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய அரசு ஆறு மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதே நேரம் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, ரயில் விபத்துக்கள் மற்றும் மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ள நிலையில் அனைவருக்கும் ஏற்ற வகையில் புதுப்புது அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் எனவும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.