
நடப்பு ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. இரண்டு அணிகளுக்கும் இந்த ஆண்டின் கடைசி போட்டி இதுதான். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த நிலையில் எம்.எஸ். தோனி தனது ஓய்வு குறித்து அறிவிப்பாரா என கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த எம்எஸ் தோனி எனது ஓய்வு குறித்த முடிவு எடுக்க இன்னும் 4,5 மாதங்கள் உள்ளன. நான் மீண்டும் ராஞ்சிக்கு சென்று கொஞ்சம் ஜாலியாக பைக் ஓட்டி மகிழ்ந்துவிட்டு பிறகு முடிவு செய்வேன்.
கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஆட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வு பெற வேண்டுமென்றால் சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும். என எம்.எஸ் தோனி கூறியுள்ளார். மேலும் இத்துடன் முடிந்து விட்டது என்று நீங்கள் சொல்லவில்லையே என்ற கேள்விக்கு முடிந்துவிட்டது என்றும் சொல்லவில்லை. திரும்பி வருவேன் என்றும் சொல்லவில்லை என எம்.எஸ் தோனி கூறியுள்ளார் .