இன்னும் 4 நாட்களில் ஐபிஎல் 17வது சீசன் தொடங்க உள்ளது. மார்ச் 22இல் நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. ரூ.1700 முதல் ரூ.7500 வரை விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளை, Paytm Insider (9:30am) மற்றும் சிஎஸ்கே இணையதளத்தில் (9:30am) பெறலாம். ஒரு நபர் 2 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.