
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தற்போது அதிர்ச்சிகரமான முடிவை ஒன்றை எடுத்துள்ளது. இந்த ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு பிறகு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் சார்பாக தன்னுடைய புதிய வாடிக்கையாளர்களுக்கு இனி இஎம்ஐ கார்டு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த சேவையில் பல்வேறு குறைபாடுகள் தெரியவந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குறைபாடுகள் நீக்க பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கியால் கவனிக்கப்பட்ட குறைபாடுகள் திருப்திகரமாக சரி செய்யப்படும் வரை இஎம்ஐ கார்டின் மீதான தடை தொடரும் என்று தெரிவித்துள்ளது. தற்போது குறைகளை நீக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.