65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 65 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே மருத்துவ காப்பீடு எடுக்க முடியும் என்கிற விதி இருந்தது. இந்நிலையில் இந்த விதியை  தளர்த்தி, இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீட்டை பெறலாம் என்று அறிவித்துள்ளது. மேலும்  புற்றுநோய், எச்ஐவி பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பிரத்யேக காப்பீடுகளை செயல்படுத்தவும் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.