இனி 2 ஆண்டு பிஎட் படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையை 2020ன் படி ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு கால படிப்பை அறிமுகம் செய்ய உள்ளதால் இனி பழைய நடைமுறையில் இருக்கும் இரண்டு ஆண்டு பிஎட் படிப்பிற்கு அனுமதி வழங்கப்படாது. வரும் கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டு பிஎட் படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் புதிதான 4 ஆண்டுகால ஒருங்கிணைந்த B.Ed படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.