ஏர் இந்தியா விமானத்தில் மது அருந்துதல் தொடர்பான கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தாமாக மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான பணிக்குழுவினரால் மட்டுமே மது வழங்கப்பட வேண்டும் என்றும், பயணி கூடுதலாக மதுவைக் கேட்டால் மறுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தாமாக மது அருந்தி வரும் பயணிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் விமானத்தில் மது அருந்திவிட்டு பயணி ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில், புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.