உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர் ராம சரித நூலில் ஓரிரு இடங்களில் இடம்பெற்றுள்ள ஜாதியை குறிப்பிட்டு விமர்சிப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என கூறி இருந்தார். இதன் காரணமாக சுவாமி பிரசாத் மவுரியாவை கண்டித்து அகில இந்திய இந்து மகாசபையினர் போராட்டம் நடத்தினார்.

இந்த போராட்டத்தின் போது அகில இந்திய இந்து மகாசபையின் பொறுப்பாளர் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது மாவட்ட பொறுப்பாளர் சுவாமி பிரசாத் மவுரியாவின் நாக்கை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ. 51,000 வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் அவரின் இந்த பேச்சு தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.