தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான விஜய் ஆண்டனி நான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் ரோமியோ திரைப்படம் வெளியாகியது. இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி சமீப காலமாக காலில் செருப்பு அணியாமல் நடக்கிறார். அந்த வகையில் ஹைதராபாத்தில் நடந்த பட  நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் செருப்பு அணியாமல் கலந்து கொண்டார்.

அப்போது விஜய் ஆண்டனியிடம் நிருபர்கள் செருப்பு அணியாமல் நடப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, நான் சில நாட்களுக்கு முன்பாக செருப்பு அணியாமல் சுற்றித்திரிந்தேன். அது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. காலில் செருப்பு அணியாமல் நடக்கும்போது மன நிம்மதி கிடைக்கிறது. அது ஆரோக்கியத்துக்கும் சிறந்தது. அதோடு நமக்குள் இது தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். நான் எப்போது செருப்பில்லாமல் நடக்க ஆரம்பித்தேனோ  அப்போது எந்தவித நெருக்கடிகளும் இல்லாமல் இருக்கிறது. இதனால்தான் வாழ்நாள் முழுவதும் செருப்பு அணியாமல் நடக்க விரும்புகிறேன். மேலும் இது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.