உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் whatsapp நிறுவனம் பயனர்களுடைய வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலமாக டிக்கெட் புக் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மற்றொரு புரட்சிகரமான முடிவை எடுத்துள்ளது. டெல்லிவாசிகளுக்கு விரைவில் வாட்ஸ்அப்பில் பஸ் டிக்கெட் கிடைக்கும்.

வாட்ஸ்அப் அடிப்படையிலான பஸ் டிக்கெட் வழங்கும் முறையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடைமுறையை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. இதேபோல், பேருந்துகளிலும் இந்த முறையை அறிமுகப்படுத்த ஆயத்தம் செய்யப்பட்டு வருகிறது.