ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370 பிரிவை நீக்கியது என்பது தற்காலிகமான நடவடிக்கைதான் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இரண்டு சட்டப்பிரிவுகளையும் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்ததற்கு எதிரான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் மூன்று விதமான தீர்ப்புகளை வழங்கியது உச்ச நீதிமன்றம். கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணை தொடங்கி 16 நாட்கள் நடைபெற்ற நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.  தலைமை நீதிபதி சந்திர சூட், பி.ஆர் கவாய், சூர்யகாந்த்  ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கினர். நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றொரு தீர்ப்பை அளித்துள்ளார்.

சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதா என்பது குறித்து ஆராயப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது செல்லுபடியாகுமா? என்ற கேள்விக்கு தீர்ப்பளிக்க தேவையில்லை என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மூன்று தீர்ப்புகளை ஒரே முடிவாக கருத வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி சந்திரசூட், குடியரசு தலைவர் ஆட்சி இருக்கும் போது மத்திய அரசின் எடுக்கும் முடிவை கேள்விக்கு உள்ளாக்க முடியாது.  இந்தியாவுடன் இணைந்த பிறகு ஜம்மு காஷ்மீருக்கு என்று தனியாக இறையாண்மை கிடையாது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது மாநிலங்களில் மத்திய அரசால் அமல்படுத்தப்படும் ஒவ்வொரு முடியும் கேள்வி கேட்க முடியாது. மாநிலத்தில் நிலவிய போர் சூழல் காரணமாக செய்யப்பட்ட தற்காலிக ஏற்பாடு தான் சட்டப்பிரிவு 370.. சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானது தான் என்ற முடிவுக்கு வருகிறோம்.

சட்டமன்றத்தின் பரிந்துரைகள் குடியரசுத் தலைவரை கட்டுப்படுத்தாது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியில் ஒன்றுதான்.அவசர சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளையே கொண்டது என தெரிவித்துள்ளார்.