ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் மானிய விலையில் வெல்லம் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது போதிய இருப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தற்போது வெளிச்சந்தையில் ஒரு கிலோ வெல்லத்தின் விலை 150 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் ரேஷன் கடைகளில் 67 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் பருப்புகளுடன் சர்க்கரை மற்றும் கோதுமை மாவு அரசு விநியோகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.