தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் குழந்தைகளுடைய நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 2000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அவர்களுடைய 18 வயது வரை இந்த உதவி தொகை வழங்கப்படும்.

14 வயதுடைய அனைத்து சிறுமிகளுக்குமே தடுப்பூசி வழங்குவதற்கும் 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் 83 கோடி நிதி ஒதுக்கீட்டில் குழந்தை மையங்கள் அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெரு நகரங்களில் பெண்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு 75 கோடி நிதி ஒதுக்கீட்டில் முக அடையாளம் காணும் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.