இந்தியாவில் மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பொதுமக்கள் அதிக அளவில் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதால் சில நேரங்களில் தீமையாக முடிவடைகிறது. அதிலும் குறிப்பாக வலி நிவாரணி மாத்திரைகள் அதிக அளவு விற்பனையாகின்றது. மருந்து கடைகாரர்கள் மக்களின் உடல் உபாதைகள் மட்டும் கேட்டு இருந்து அதற்கு ஏற்றது போல மருந்து மாத்திரைகளை வழங்குகிறார்கள் . அதனைப் போலவே ஆன்லைன் மூலமும் மருந்து விற்பனை அதிகரிக்கின்றது. இதனை அதிக அளவு எடுத்துக் கொள்ளும்போது வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்தால் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.