
ரஷ்யா தற்போது புற்று நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளது. அதாவது புற்றுநோயை குணப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் ரஷ்யா பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்து நிலையில் தற்போது mRNA அடிப்படையில் ஆன ஒரு புதிய வகை தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர்.
பல ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து இந்த தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசி சிறப்பான முறையில் செயல்படுவதாகவும் அடுத்த வருடம் தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் இதனை பொது மக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாகவும், ரஷ்ய பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.