நடிகர் ரவி மோகன் (முன்னாள் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து வழக்கு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களால் கடந்த சில வாரங்களாகவே மீடியாக்களில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார். அண்மையில் அவர் நடத்திய பிரஸ் மீட்டில், “என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை அடிமை போல நடத்தினார்கள், அசிங்கப்படுத்தினார்கள். என் பிள்ளைகளைக்கூட என்னைப் பார்க்க விட மறுக்கிறார்கள். இந்த மன உளைச்சலில் என்னால் நடிக்க முடியாது, விவாகரத்து முடியும் வரை என் படங்கள் திரைக்கு வராது” என ஆக்ரோஷமாகச் சபதம் எடுத்திருந்தார்.

அவரது வதந்தி காதலியாகக் கூறப்படும் சிங்கர் கினீஷா பிரான்சிஸ், ஆன்லைன் ட்ரோல்களால் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டையே டெலிட் செய்த சில வாரங்களிலேயே, ரவி மோகன் மீண்டும் ஸ்பாட்லைட்டுக்கு வந்துள்ளார். ​”இனி நடிக்க மாட்டேன்” என ரவி மோகன் கூறியிருந்த நிலையில், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ‘பென்ஸ்’ (Benz) திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ரவி மோகனின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தைப் பகிர்ந்து, அவரை “லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்” (LCU) உலகிற்குள் முறைப்படி வரவேற்றுள்ளார்.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், நிவின் பாலி மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடிக்கும் இந்த ஹை-வோல்டேஜ் ஆக்ஷன் படத்தில் ரவி மோகனும் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. ‘கைதி, விக்ரம், லியோ’ வரிசையில் ‘பென்ஸ்’ படமும் எல்சியூ-வின் ஒரு பகுதிதான் என்பதை லோகேஷ் உறுதிப்படுத்தியுள்ளதால், ரவி மோகனின் இந்த மாஸ் ரீ-என்ட்ரி ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.