மத்திய அரசு 1 முதல் எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு டெட் தேர்வை கட்டாயமாக்கியது. நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியை பெற இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நிலையில் உத்தரபிரதேச அரசு ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வை தவிர்த்து கூடுதலாக சூப்பர் டெட் என்ற மற்றொரு தகுதி தேர்வை அறிமுகம் செய்தது. டெட் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் என்பது வாழ்நாள் முழுவதும் செல்லுபடி ஆகும்.

இந்த நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஜூனியர் உயர்நிலைப்பள்ளி உதவி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதற்காக பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.