தமிழகத்தில் பல பகுதிகளிலும் சாலையோரங்களில் உள்ள மரங்களை பொதுமக்கள் தங்களுடைய தேவைக்காக வெட்டுகின்றனர். இதனால் நாளடைவில் அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டு மண்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனை சரி செய்ய தமிழக அரசு சாலையோரங்களில் உள்ள மரங்கள் மற்றும் புறம்போக்கு பகுதியில் உள்ள மரங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் புதிதாக மரம் சட்டம் கொண்டு வந்துள்ளது.

பொதுமக்கள் தங்களுடைய தேவைக்காக வெட்டக்கூடாது என்றும் அரசின் முழு அனுமதியின் பெயரில் மட்டுமே மரங்களை வெட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் அரசின் இந்த புதிய சட்டத்தை மீறி மரங்களை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மரத்தை வெட்டியவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.