கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஜாதி மற்றும் மதம் போன்ற விவரங்களை கேட்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பேடுகளில் அந்தந்த மாணவர்களின் ஜாதி மற்றும் மதமுள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதனை கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகர் மாவட்ட தலைவர் நேருதாஸ் என்பவர் முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஜாதி மற்றும் மதம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்படுவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள சாதி, மதம் சார்ந்த விவங்களை சுயவிவர குறிப்பு மற்றும் கையேட்டில் நடப்பு கல்வியாண்டு முதல் குறிப்பிடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.