
தமிழகத்தில் ஸ்விப்ட், மாருதி சுசுகி, வேகன் ஆர் கார்களில் குறிப்பிட்ட மாடல்களை மட்டுமே மஞ்சள் போர்டுடன் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி இருந்தது. இந்த நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இனி வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை வாடகைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.