
மலையாள சினிமாவில் நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அதேசமயம் கேரளாவில் நடிகர் சங்கம் கலைக்கப்பட்ட நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் களான மம்முட்டி மற்றும் மோகன்லால் மட்டும் அமைதி காப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக நேற்று பேசிய மோகன்லால் மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் புகார்கள் குறித்து அரசாங்கம் விசாரிக்கும் என்றும் குற்றசாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதேபோன்று தற்போது மம்முட்டியும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து மௌனம் கலைத்துள்ளார். அதாவது ஹேமா கமிட்டி அறிக்கை பரிந்துரைத்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இனியும் கொடுமைகளை வேடிக்கை பார்க்க முடியாது. மேலும் குற்றம் செய்தவர்களுக்கு நீதிமன்றம் தண்டனையை தீர்மானிக்கட்டும் என்று கூறினார்.