தமிழ் சினிமாவில் மெட்ராஸ் காரன் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகர் ஷேன் நிகாம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வாலி மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கலையரசன், நிஹாரிக்கா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அதில் பேசிய கலையரசன் கூறியதாவது, தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரங்களை கொடுக்கின்றனர். மலையாள சினிமாவில் அப்படி கிடையாது. ஒருவர் ஹீரோவாகவும், குணசித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடிக்கிறார்கள். கதையில் சாவு என்று இருந்தாலே என் பெயரை எழுதி விடுகிறார்கள். இனிமேல் நான் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதை நிறுத்தப் போகிறேன் என கூறியுள்ளார்.