இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது, பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது என மத்திய அமைச்சர் அமைச்சர்  தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , “தமிழ்நாட்டில் தமிழ், கேரளாவில் மலையாளம், இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது?, எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?

நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை  அமித்ஷா  நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.