மடிக்கக்கூடிய Flexible Smartphone -ஐ மோட்டோரோலா (Motorola) நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. நீங்கள் இந்த செல்போனை டேபிளில் வைத்தும் பயன்படுத்தலாம், கைகளில் பிரேஸ்லெட் போலவும் அணிந்துகொள்ளலாம். லெனோவா டெக் வொர்ல்டு 2023 நிகழ்வில் இந்த கான்செப்ட் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா.

மடிக்கப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் அளவில் முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது. மடிக்கப்பட்ட நிலையில், இது 4.6 இன்ச் அளவில் மாறிவிடும். மோட்டோரோலாவின் புதிய வகை கான்செப்ட் போன் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.