மஞ்சள் காய்ச்சல் அபாயம் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் கட்டாயம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்ரிக்கா, தெற்கு அமெரிக்காவில் மஞ்சள் காய்ச்சல் நோய் தாக்கம் உச்சம் தொட்டு வருகிறது. எனவே அங்கிருந்து தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் வருபவர்களை 6 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். மேலும் அங்கிருந்து இந்தியா வருபவர்களுக்கும், இங்கிருந்து அங்கே செல்பவர்களுக்கும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம்  என அரசு உத்தரவிட்டுள்ளது.

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டு, 10 நாட்களுக்கு பின்தான், மேற்கண்ட நாடுகளுக்கு செல்ல, அங்கிருந்து வர அனுமதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் 3 இடங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. இந்தியாவில் 50 இடங்களில் போடப்படுகிறது.