தமிழகத்தின் அமைச்சரவையில் முதன் முறையாக எம்எல்ஏ டிஆர்பி ராஜா இணைய இருக்கிறார். இவர் திமுக கட்சியின் பொருளாளர் டிஆர் பாலு எம்.பியின் மகன் ஆவார். நேற்று இரவு தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து தமிழக அமைச்சரவையில் டிஆர்பி பாலு இணைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு எந்த இலக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளிவரவில்லை. டிஆர்பி ராஜா வருகின்ற 11-ஆம் தேதி அமைச்சராக பதவியேற்க இருக்கிறார். கடந்த 1976-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டை என்ற பகுதியில் பிறந்த டி.ஆர் ராஜா 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் மன்னார்குடி தொகுதியில் எம்எல்ஏவாக மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.

சிறு வயது முதலே ஸ்டாலின் பார்த்து வளர்ந்த பிள்ளை டி.ஆர் ராஜா. இவர் திமுக கட்சியின் ஐ டி விங் மாநில செயலாளராகவும் செயல்படுகிறார். இதனால் டிஆர்பி ராஜா மீது பெரும் நம்பிக்கை வைத்து தமிழக அமைச்சரவையில் அவருக்கு முதல்வர் ஸ்டாலின் இட ஒதுக்கீடு ‌ செய்துள்ளார். ஏற்கனவே ஆடியோ விவகாரம் வெளியான நிலையில் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்படுவதாக கூறப்பட்டது. மேலும் டிஆர்பி ராஜாவுக்கு கண்டிப்பாக முக்கியமான ஒரு இலாக்கா தான் ஒதுக்கப்பட்டிருக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.