இந்தி சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள்ளதாகவும் வெளியில் இருந்து வருபவர்களை வளரவிடாமல் அவர்கள் தடுப்பதாகவும் ஏற்கனவே பலர் குற்றம்சாட்டி இருக்கின்றனர். அண்மையில் நடிகை பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில் “இந்தி பட உலகில் என்னை ஓரம் கட்ட ஒரு கும்பல் சதிசெய்தது. இதனால் இந்தி படங்களில் நடிக்காமல் ஹாலிவுட்டுக்கு சென்றேன்” என்று கூறினார்.

இந்நிலையில் தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் ஆகிய படங்களில் நடித்துள்ள இந்தி நடிகை நீது சந்திராவும் இந்தி பட உலகில் வாரிசுகள் ஆதிக்கத்தை கண்டித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “இப்பிரச்சினை ஒருவருக்கு மட்டும் இல்லை. அனைவருக்குமே இதே நிலைமைதான் உள்ளது. சினிமா குடும்பத்தை சேர்ந்த வாரிசாக நீங்கள் இல்லை எனில் பட வாய்ப்புக்காக போராட வேண்டும். எனினும் இதுகுறித்து பேச யாரும் முன்வருவதில்லை” என்று நீது சந்திரா கூறினார்.