இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் மக்கள் பலரும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்திய ரயில்வே அரசின் புதிய அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவி பதவியேற்று உள்ள நிலையில் ரயில்வே துறையை மேம்படுத்த பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். அதன்படி புதிய ரயில்கள் தொடங்குதல், ரயில் நிலையங்களை புதுப்பித்தல் மற்றும் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தால் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். சமீபத்தில் ரயில்வே அமைச்சகம் அதிகாரிகளின் அறைகளின் மேசையில் பெல் இருக்காது என்று அறிவித்தது.

மேலும் ரயில் சேவைகளை மேம்படுத்தும் வகையில் தொடர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் சேவையில் முன்னேற்றத்துடன் ரயிலின் வேகம், பிளாட்பாரம் மற்றும் ரயில் பெட்டிகளின் தூய்மை ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக சிறந்த பெட்டிகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே முன்வரிசை ஊழியர்கள் அதாவது ரயில் டிக்கெட் பரிசோதவர்கள், ரயில் காவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் முதல் உதவி அளிக்க பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.