
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான எஸ்.எம். பாக்கர் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அதிலிருந்து விலகி கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை உருவாக்கினார். இதிலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் அதிலிருந்து விலகி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பினை உருவாக்கினார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக இருதய நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவருக்கு நுரையீரல் நிமோனியா தொற்று ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இரவு காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய உடல் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.