இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று (அக்டோபர் 4) ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய ஆடவர் அணிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள இந்த அணியில், முன்னணி வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி பலரும் எதிர்பார்த்தவாறே, ஒருநாள் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அணியின் தொடக்க வீரராக மட்டுமல்லாது, அணியை வழிநடத்தும் பொறுப்பும் மேற்கொண்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக செயல்படுவார்.
இதேவேளை, டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் மீண்டும் கேப்டனாக தேர்வே செய்யப்பட்டுள்ளார். சுப்மன் கில் இங்கு துணை கேப்டனாக செயல்படுவார்.
ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.
இந்திய ஒருநாள் அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
டி20 அணியில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் வலுவான தேர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடக்க வீரராக அபிஷேக் சர்மா, நடுவண் வரிசையில் திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே போன்றோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்து பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா நீண்ட இடைவேளைக்கு பிறகு திரும்பியுள்ளார்.
இந்திய டி20 அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.
சுற்றுப்பயண அட்டவணை
ஒருநாள் தொடர்: முதல் போட்டி – அக்டோபர் 19: பெர்த், இரண்டாவது போட்டி – அக்டோபர் 23: அடிலெய்டு, மூன்றாவது போட்டி – அக்டோபர் 25: சிட்னி
டி20 தொடர்: முதல் போட்டி – அக்டோபர் 29: கான்பெரா, இரண்டாவது போட்டி – அக்டோபர் 31: மெல்போர்ன், மூன்றாவது போட்டி – நவம்பர் 2: ஹோபார்ட், நான்காவது போட்டி – நவம்பர் 6: கோல்டு கோஸ்ட் ,ஐந்தாவது போட்டி – நவம்பர் 8: பிரிஸ்பேன்
