
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உலகக்கோப்பையை வென்று கொடுத்த 3-வது கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழும் எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர், சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 கோப்பைகளை வென்றுள்ளது. இவர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்ற பெருமை தோனியை சேரும்.
இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற பல மகத்தான வீரர்கள் இந்திய அணியில் வளர்ந்ததற்கு எம்.எஸ் தோனி தான் காரணம் என்று ஷர்துல் தாகூர் கூறியுள்ளார். அதாவது எம்.எஸ் தோனி சிறப்பான முறையில் இளம் வீரர்களை வழிநடத்துவார் என்று அவர் கூறியுள்ள நிலையில், தற்போது சிறப்பான வீரர்களாக இருக்கும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கூட ஒரு காலத்தில் அணியை விட்டு விலகும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து அவர்களை வளர்த்து விட்டவர் எம்.எஸ். தோனி. மேலும் அவர்கள் இன்றுவரை சிறப்பான முறையில் விளையாடுவதற்கு தோனி தான் காரணம் என்று கூறியுள்ளார்.