இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை போட்டியுடன் நிறைவடையும் நிலையில் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் குறிப்பாக கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. அதாவது பிசிசிஐயிடம் ‌ கம்பீர் ஒரு கோரிக்கை வைத்ததாகவும் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டதால் அவர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதோடு தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல் அனைத்திலும் கம்பீர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்படும் பட்சத்தில் அவர் 2027 ஆம் ஆண்டு வரை ரோஹித் சர்மா தான் கேப்டன் நாகத்தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாராம். அதாவது டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் ரோஹித் சர்மாவே கேப்டனாக தொடர வேண்டும் என்று பிசிசிஐ இடம் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.