இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்திய அணிக்கு சிறந்த பயிற்சியாளராக கம்பீர்  இருப்பார் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, நான் இந்திய அணியின் பயிற்சியாளருக்கு ஆதரவாக இருக்கிறேன்‌. ஒருவேளை கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தால் அவர் சிறப்பான பயிற்சியாளராக இருப்பார்.

டி 20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். அந்த வகையில் பல வருடங்களுக்கு பிறகு அந்த அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டால் அவர் சிறப்பாக செயல்படுவார். அதோடு டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறினார்.