
சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்று பாகிஸ்தானில் தொடங்கிய நிலையில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில் நியூசிலாந்து அணி சொந்த மண்ணிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இன்று நடைபெறும் போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்தியா மோதுகிறது. இதில் இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகள் மட்டும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக துபாயில் நடைபெறுகிறது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதும் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் வானிலை ஆய்வு மையம் துபாயில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி 25 சதவீதம் வரை மேட்ச் நடைபெறும் இடத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மொத்த போட்டியும் மழையினால் பாதிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது. மேலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்கிய நிலையில் இந்தியா மோதும் முதல் போட்டியிலையே மழை குறிக்கிடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.