பாகிஸ்தான், தற்போது தன் வரலாற்றிலேயே காணாத அளவுக்கு பாதுகாப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திடம் வெறும் 96 மணி நேரம் (நான்கு நாட்கள்) போரை தாங்கும் அளவிலேயே வெடிமருந்துகள் உள்ளன என்று ராணுவத் தரப்பிலிருந்து வந்துள்ள தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

M109 ஹோவிட்சர்கள், BM-21 ராக்கெட் லாஞ்சர்கள், SH-15 துப்பாக்கிகள் உள்ளிட்ட முக்கிய ஆயுதங்களுக்கே தற்போது வெடிமருந்துகள் கிடைக்கவில்லை. ராணுவ வாகனங்களுக்கு டீசல் இல்லை, பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனைப்பொறுத்தவரை பாகிஸ்தான் இராணுவம் தற்போது தோல்விக்கே நெருங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உளவுத்துறைகள்  தெரிவித்துள்ளன.

இந்த நெருக்கடியை உருவாக்கிய முக்கிய காரணங்களில் ஒன்று, பாகிஸ்தானின் உள்நாட்டு பொருளாதார வீழ்ச்சி. அதிகமான வெளிநாட்டு கடன்கள், பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணியின் நாசம் ஆகியவை, இராணுவத்துக்கும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ததும், நாட்டின் பாதுகாப்பு கையிருப்புகளை வெறுமனையாக்கியுள்ளதாகவும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

இந்தியா உள்ளிட்ட பாதுகாப்பு வல்லுநர்கள் பலர், “இந்திய ராணுவத்தின் முன்னிலையில் பாகிஸ்தானின் வலிமை மிகவும் குறைவானது. தரைவழிப் போர்களில் இந்தியா வெற்றியை எளிதில் நிலைநாட்டும்” என்கிறார்கள். இந்திய ராணுவத்திடம் 1000க்கும் மேற்பட்ட T-90, T-72 மற்றும் அர்ஜுன் டாங்கிகள் உள்ளன. இது பாகிஸ்தானின் 350 VT-4 டாங்கிகளை ஒப்பிடும்போது மிகப்பெரிய வலிமை என கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு ரீதியாக மிகப் பெரிய இடர்பாடை எதிர்கொள்கிறது என்பது உறுதி. மேலும் பாகிஸ்தான் போர் தொடர்ந்தாலும் இந்தியா சுலபமாக வீழ்த்திவிடும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.